1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Dinesh
Last Modified: புதன், 13 ஜூலை 2016 (12:14 IST)

பயணிகள் ரெயில் நேருக்கு நேர் மோதி விபத்து: 27 பேர் பலி

இத்தாலி நாட்டில் இரண்டு பயணிகள் ரெயில்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில், 20 பேர் உயிரிழந்துள்ளனர்.



தெற்கு இத்தாலியின் புக்லியா பகுதியில் இரண்டு பயணிகள் ரெயில் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. கோரடோ மற்றும் ஆண்டிரியா நகரங்களுக்கு இடையிலான ஒரு வழி ரெயில் பாதையில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. நான்கு பெட்டிகளை கொண்ட இரண்டு ரெயில்களும்  வேகமாக மோதியதால் இரண்டு ரெயில்களிலும் உள்ள முன் பெட்டிகள் சுக்கு நூறாக சிதைந்தது.

இதனை தொடர்ந்து இடிபாடுகளில் சிக்கிக் கொண்டவர்களை மீட்கும் பணிகளில் மீட்பு படை வீரர்கள் ஈடுபட்டனர்.  இந்நிலையில் இந்த விபத்தில் 27 பேர் பலியானதாகவும், 50 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் இத்தாலி அரசு தெரிவித்துள்ளது.  மீட்கப்பட்ட பயணிகளை அருகில் உள்ள கோரடோ நகர மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அவர்களை காப்பாற்ற, பொதுமக்கள் ரத்த தானம் செய்ய முன்வரும்படி, என கோரடா நகர மேயர் அழைப்பு விடுத்துள்ளார்.
 

 

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்