1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: சனி, 22 நவம்பர் 2014 (06:21 IST)

விண்வெளியில் காபி அருந்தப் போகும் வீராங்கனை

சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு காபி தயாரிக்கும் இயந்திரம் ஒன்று இந்த வார இறுதியில் கொண்டு செல்லப்படுகிறது.



இந்த காபி தயாரிக்கும் கருவியை விண்வெளி ஆய்வு நிலையத்துக்கு எடுத்துச் செல்லும் முதல் இத்தாலிய பெண் விண்வெளி வீராங்கனையான, சமாந்தா க்ரிஸ்டொஃபொரெட்டியால், இந்த இயந்திரத்திலிருந்து தயாரிக்கப்படும் எஸ்பிரஸ்ஸோ காபியை முதன் முதலாக விண்வெளியில் சுற்றுப்பாதையில் அனுபவிக்க முடியும்.
 
சமாந்தா கிரிஸ்டொஃபொரெட்டி, எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை ரஷ்ய ராக்கெட் ஒன்றின் மூலம் இந்த சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு செல்லும் மூன்று விண்வெளிவீரர்களில் ஒருவர்.
 
இந்த 20 கிலோகிராம் எடையுள்ள காபி தயாரிக்கும் இயந்திரத்தில் உள்ள எஃகுப் பாகங்கள் பெரும் அழுத்தங்களைச் சமாளிக்க வல்லவை.
 
அதிலுள்ள குழாய்கள் ஈர்ப்பு சக்தியே இல்லாத நிலையிலும் காபியை ஒழுங்காகப் பாயவிடும் வகையில் விசேஷமாக இத்தாலியில் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன.