1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By isreal pm
Last Modified: திங்கள், 20 மே 2024 (18:17 IST)

இஸ்ரேல் பிரதமருக்கு கைது வாரண்ட்? சர்வதேச நீதிமன்றம் அதிரடி..!

இஸ்ரேல் பிரதமர் போர் குற்றம் செய்துள்ளதால் அவரை கைது செய்ய சர்வதேச நீதிமன்றம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
கடந்த சில மாதங்களாக பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்புக்கும் இஸ்ரேலுக்கும் இடையே போர் நடந்து வரும் நிலையில் இந்த போரில் காசாவில் நடந்த தாக்குதலில் மொத்தம் 35 ஆயிரம் பலியாகி விட்டதாக கூறப்படுகிறது.
 
இந்த நிலையில் இஸ்ரேல் பிரதமர் மீது போர் குற்றங்களில் ஈடுபட்டதாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதனை அடுத்து இஸ்ரேல் பிரதமர் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் இல்லையேல் அவருக்கு கைது வாரண்ட் பிறப்பிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. 
 
இஸ்ரேல் பிரதமர், அந்நாட்டின் பாதுகாப்பு துறை அமைச்சர் மற்றும் முக்கிய தலைவர்கள் போர் குற்றங்களில் ஈடுபட்டதற்கு பொறுப்பெடுக்க வேண்டும் என்று சர்வதேச குற்றவியல் நீதிமன்ற முதன்மை வழக்கறிஞர் வழக்கு தொடுத்த நிலையில் இந்த வழக்கின் முதல் கட்ட விசாரணையில் தான் மேற்கண்ட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 
 
பச்சிளம் குழந்தைகள், சிறார்கள், பெண்கள் ஆகியோர்கள் அதிகம் உயிரிழந்த வருவதை அடுத்து இஸ்ரேல் பிரதமரை போர் குற்றவாளி என்ற அறிவிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. 
 
Edited by Mahendran