வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 12 ஏப்ரல் 2024 (11:00 IST)

6 ஆயிரம் இந்தியர்களை வேலைக்கு அழைக்கும் இஸ்ரேல்..! ஏன் தெரியுமா?

Workers
இஸ்ரேலில் போர் நடந்து வரும் நிலையில் இந்தியாவிலிருந்து 6 ஆயிரம் பேரை வேலைக்கு அமர்த்த உள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.



இஸ்ரேல் – ஹமாஸ் இடையே கடந்த ஆண்டு முதலாக தொடர்ந்து போர் நடந்து வருகிறது. இதனால் இஸ்ரெலில் இருந்து பல நாடுகளை சேர்ந்த பணியாளர்களும் வெளியேறி சொந்த நாட்டுக்கு சென்றுவிட்டனர். இதனால் இஸ்ரேலில் கட்டுமானப் பணிகள் உள்ளிட்ட பல கட்டமைப்பு வசதிகளை நிர்வகிக்க பணியாளர்கள் இல்லாமல் திண்டாட்டம் ஏற்பட்டுள்ளது.

பணியாளர்கள் பற்றாக்குறையை சமாளிக்க இந்தியாவிலிருந்து பணியாளர்களை அழைக்க உள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து இஸ்ரேல் அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்தியாவிலிருந்து 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கட்டுமான தொழிலாளர்கள் விமானங்கள் மூலமாக இஸ்ரேலுக்கு அழைத்து வரப்பட உள்ளதாக தெரிவித்துள்ளது. ஏப்ரல் – மே மாதத்திற்குள் இவர்கள் இஸ்ரேல் அழைத்து வரப்பட உள்ளனர் என தெரிவித்துள்ளது.

Edit by Prasanth.K