1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Updated : வெள்ளி, 28 நவம்பர் 2014 (15:11 IST)

”நாங்கள் உங்களைப் பாதுகாப்போம்”: பெர்குஷன் கருப்பினப் போராட்டகாரர்களுக்கு ஐஎஸ்ஐஎஸ் அழைப்பு

”ஹேய் கருப்பினத்தவரே!, எங்களுடன் இணையுங்கள் நாங்கள் உங்களை பாதுகாப்போம்” என பெர்குஷன் போராட்டக்காரர்களுக்கு ஐஎஸ்ஐஎஸ் இயக்கம் அழைப்பு விடுத்துள்ளது.
பாக்தாத்-சிரியாவின் பெரும் பகுதிகளை கைப்பற்றி ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்தினர் இஸ்லாமிய அரசாக அறிவித்துள்ளனர். தங்கள் இயக்கத்தில் சேருவற்கு உலகம் முழுவதும் உள்ள ஜிகாதிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளனர். பல்வேறு நாடுளை சேர்ந்த ஜிகாதிகள் ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்தில் சேர்ந்து வருகின்றனர். குறிப்பாக மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்தவர்கள் அதிகமாக ஐஎஸ்ஐஎஸ் இயக்கதில் சேர்ந்து வருகிறார்கள்.
 
தற்போது பெர்குசன் வன்முறையை பயன்படுத்தி கருப்பினத்தவரை தங்கள் இயக்கத்தில் சேர அழைப்பு விடுத்துள்ளனர். ”ஹேய் கருப்பினத்தவரே!, எங்களுடன் இணையுங்கள் நாங்கள் உங்களை பாதுகாப்போம்” என பெர்குஷன் போராட்டக்காரர்களுக்கு ஐஎஸ்ஐஎஸ் இயக்கம் அழைப்பு விடுத்துள்ளது. ஐஎஸ்ஐஎஸ் இயக்க சோஷியல் மீடியாக்களில் கருப்பினத்தவருக்கு அவர்கள் இந்த அழைப்பை விடுத்துள்ளனர்.
 
மேலும் அடுத்த பக்கம்..

அமெரிக்காவில் மிசவுரி மாகாணம், பெர்குசானில் கடந்த ஆகஸ்டு மாதம் 9 ஆம் தேதி, மைக்கேல் பிரவுன் என்ற கருப்பின வாலிபரை டேரன் வில்சன் என்ற வெள்ளை இன போலீஸ் அதிகாரி சுட்டுக்கொன்ற சம்பவம், அங்கு தொடர் போராட்டங்களுக்கு வழி வகுத்தது.
இந்த வழக்கில் போலீஸ் அதிகாரி டேரன் வில்சன் மீது நீதிமன்றத்தில் குற்ற விசாரணை நடத்த தேவையில்லை என பெருநடுவர் குழு 24 ஆம் தேதி தீர்ப்பு அளித்தது. ஆப்பிரிக்க அமெரிக்க இனத்தவர் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
இதைத் தொடர்ந்து பெர்குசானில் கலவரம் நடந்து வருகிறது. கலவரக்காரர்களை விரட்டியடிக்க காவல்துறை கண்ணீர்ப் புகை குண்டுகளை வெடித்தனர். அங்கு ஒரு கார் தீயிட்டு கொளுத்தப்பட்டது. 12 வணிக கட்டிடங்கள் கொளுத்தப்பட்டன. பல வணிக நிறுவனங்கள் கொள்ளையடிக்கப்பட்டன. தொடர் பதற்றம் காரணமாக அங்கு 2 ஆயிரத்துக்கும் அதிகமான தேசிய பாதுகாப்பு படை வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.
 
நியூயார்க், லாஸ் ஏஞ்சல்ஸ், போர்ட்லேண்ட், அட்லாண்டா ஆகிய நகரங்களிலும் கலவரம் பரவியுள்ளது. பொதுமக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர். சுமார் 170 நகரங்களில் போராட்டங்கள் வெடித்துள்ளதாக சி.என்.என். டெலிவிஷன் கூறுகிறது. பாலங்கள், சுரங்கங்கள், நெடுஞ்சாலைகளில் போராட்டக்காரர்கள் தடைகளை ஏற்படுத்தியுள்ளனர்.