வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: புதன், 11 மார்ச் 2015 (13:23 IST)

இஸ்ரேல் உளவாளியை சுட்டுக் கொல்லும் இளம் ஐ.எஸ். தீவிரவாதி

இஸ்ரேலைச் சேர்ந்த உளவாளியை ஒருவரை இளம் ஐ.எஸ். தீவிரவாதி சிறுவன் சுட்டுக் கொல்லும் வீடியோ ஒன்றை ஐ.எஸ். அமைப்பு வெளியிட்டுள்ளது.
 
அரபு நாடுகளான ஈராக் மற்றும் சிரியாவில் பல பகுதிகளை கைப்பற்றி புதிய இஸ்லாமிய நாடுகளாக அறிவித்து வருகின்றன. மேலும், ஐ.எஸ். தீவிரவாதிகள் பிணைக் கைதிகளின் பலரையும் பிடித்து வைத்து, பின்னர் அவர்களின் தலையை துண்டித்து கொடூர கொலை செய்யும் வீடியோக்களை தொடர்ச்சியாக வெளியிட்டு வருகின்றனர்.
 

 
இதன் தொடர்ச்சியாக 10 வயது சிறுவன் ஒருவன், பிணைக்கைதியாக பிடித்து வைக்கப்பட்ட முகமது சயீத் இஸ்மாயில் முஸலாம் (19) என்ற இஸ்ரேல் உளவாளி ஒருவரை துப்பாக்கியால் சுட்டு கொல்லும் கொடூர காட்சியை வீடியோவாக வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோவை ஃப்ர்கன் மீடியா குரூப் வெளியிட்டுள்ளது.
 
அந்த வீடியோவில் ஆரஞ்ச் உடை அணிந்த முகமது சயீத் இஸ்மாயில் முசலாம் முழங்காலிட்ட படி அமர வைக்கப்பட்டுள்ளார். அவர் முன்பு 10 வயது சிறுவன் ஒருவன் துப்பாக்கியுடன் நிற்கின்றான். அவன் அருகே வேறொரு தீவிரவாதி ஒருவன் நின்று கொண்டிருக்கின்றான். அவன் பிரெஞ்ச் மொழியில் “கலிபாவின் புலிக்குட்டிகள்” என்று பேசுகிறான்.
 

 
பிறகு உளவாளி இஸ்மாயில் முஸலாம், “நான் எனது தந்தை மற்றும் மகனுக்கு கூறுகிறேன்: கடவுளிடம் மனம் திரும்புங்கள். யார் இஸ்லாமிய தேசத்தில் உளவாளிகளாக இருக்கும் உளவாளிகளுக்கு கூறுகிறேன்: உங்களால் வெற்றிபெற முடியாது. அவர்கள் உங்களை அழித்து விடுவார்கள்” என்று அந்த வீடியோவில் கடைசியாக தெரிவித்துள்ளார்.
 
சிறிது நேரத்தில் அந்த சிறுவன் இஸ்ரேல் பிணைக்கைதியை முன் தலையில் துப்பாக்கியால் சுடுகிறான். அதற்கு முன்பாக “அல்லாஹ் அக்பர்” என கூறுகிறான். இதுபோன்று 4 தடவை சுட்டவுடன் பிணைக்கைதி முஸலாம் இறந்து தரையில் சாய்கிறார்.
 

 
இது குறித்து இஸ்மாயில் முஸலாம் அவரின் தாயார் கூறுகையில், “ஐ.எஸ். தீவிரவாதிகள் அவரை பிணைக்கைதியாக பிடித்துச் சென்றதற்கு காரணம், உலகிற்கு அவர்கள் யாரென்று காண்பிக்கத்தான். அப்பொழுதுதான், அவர்களை பார்த்து இந்த உலகம் பயப்படும்” என்று குறிப்பிட்டுள்ளார்.