1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : சனி, 27 ஏப்ரல் 2019 (14:03 IST)

கர்ப்பிணிப் பெண்ணுக்குப் பிரசவம் பார்த்த இன்ஸ்பெக்டர் : நெகிழ்ச்சியான சம்பவம்

துபாய் விமானநிலையத்தில் 6 மாத கர்ப்பிணிப்பெண் ஒருவர் வயிற்றுவலியால் தவித்துள்ளார். அங்கிருந்த  பெண் இன்ஸ்பெக்டர் அவருக்கு பிரசவம் பார்த்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
துபாய் சர்வதேச விமான நிலையத்தில் கார்பரல் ஹனன் உசைன் முகமது என்ற பெண் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார்.
 
சம்பவ நாளன்று கார்பரல் வீட்டுக்குச் செல்வதற்காக தயாராகிக்கொண்டிருந்தார். அந்த நேரத்தில் இந்தியாவைச் சேர்ந்த கர்ப்பிணிப் பெண் ஒருவர் தனக்கு வயிற்றில் வலி ஏற்படுவதாகக் கூறியுள்ளார்.
 
இதுகுறித்து கார்பரல் கர்ப்பிணிப்பெண்ணிடம் விசாரித்துள்ளார். அப்போது தான் 6 மாதம் கர்ப்பமாக இருப்பதாக அவர் கூறியுள்ளார்.
 
மேலும் அப்பெண்ணின் ஆடையில் ரத்தம் கசிந்ததால் பதறிப்போயுள்ளார் கார்பரல். உடனடியாக ஆம்புலன்ஸுக்கு தகவல் அளித்துள்ளார்.
 
ஆனால் ஆம்புலன்ஸ் வருவதற்குள் வலி பெண்ணுக்கு அதிகரித்ததால், அங்குள்ள ஒரு இடத்திற்கு அழைத்துச் சென்று பெண்ணை தரையில் படுக்கவைத்து முதலுதவி செய்தார்.
 
அப்போது பெண்ணின் கர்ப்பப்பையிலிருந்து குழந்தையை பத்திரமாக மீட்டதாகத் தெரிகிறது.பின்னர் வந்த ஆம்புலன்ஸில் தாயும் சேயும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். 
 
தற்போது தாயும் சேயும் நலமாக இருப்பதாகத் தகவல் வெளியாகிறது.
 
இந்நிலையில் சரியான் சமயத்தில் தக்க முதலுதவி அளித்த கார்பரலுக்கு காவல்துறை மற்றும் பலரும் பாராட்டுக்கள் தெரிவித்து வருகின்றனர்.