வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : திங்கள், 29 டிசம்பர் 2014 (15:04 IST)

இந்தோனேஷியாவில் மாயமான ’ஏர் ஏசியா’ விமானம் கடலில் விழுந்து கிடப்பதாகத் தகவல்

இந்தோனேஷியாவில் உள்ள சுரபயா நகரிலிருந்து சிங்கப்பூருக்கு புறப்பட்ட ஏர் ஏசியா விமானம் கிழக்கு பெலிடங் தீவுப்பகுதியில் கடலில் விழுந்து நொறுங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
நேற்றுக் காலை, இந்தோனேஷியாவின் சுரபயா விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூர் நகருக்கு இன்று காலை 155 பயணிகள் மற்றும் 6 பேர் கொண்ட விமானப் பணிக்குழுவுடன் ஏர் ஏசியா விமானம் (எண் QZ8501) புறப்பட்டது.

மாயமான ஏர் ஏசியா விமானம்...
 
இந்த விமானம் புறப்பட்டு 42 நிமிடங்களில் கட்டுப்பாட்டு தொடர்பிலிருந்து திடீரென மாயமானதாக சிங்கப்பூர் சிவில் விமான போக்குவரத்து ஆணையம் தெரிவித்திருந்தது.
 
காலை 8:30 மணிக்கு சிங்கப்பூர் சென்றடைய வேண்டிய ஏர் ஏசியா விமானம், விமான கட்டுப்பாட்டு அறை தகவல் தொடர்பில் இருந்து விலகியதாகக் கூறப்படுகிறது. தகவல் பறிமாற்றம் துண்டிக்கப்பட்டதாவும், விமானம் வழக்கமான ஒடு பாதையில் இருந்து விலகிச் சென்றுவிட்டது என்று அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

விமானத்தின் வழக்கமான ஓடு பாதை...
 
இந்தோனேஷியாவில் உள்ள சுரபயா நகரிலிருந்து சிங்கப்பூருக்கு புறப்பட்ட ஏர் ஏசியா விமானம் கிழக்கு பெலிடங் தீவுப்பகுதியில் கடலில் விழுந்து நொறுங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
இந்தோனேஷிய தேசிய தேடுதல் மற்றும் மீட்பு அமைப்பை (பசார்னஸ்) சேர்ந்தவர்கள், பங்கா பெலிடங் பகுதியிலிருந்து விமானம் விழுந்து கிடக்கும் கிழக்கு பெலிடங் கடற்பகுதிக்கு விரைந்திருப்பதாகவும், பசார்னஸ் அமைப்பின் தலைவரான ஜோனி சுப்பெரியாடி பெலிடங் கடற்பகுதிக்கு விரைந்து கொண்டிருப்பதாகவும் தகவல்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
 
விமானம் தொடர்பை விட்டு விலகும் போது கலிமந்தனுக்கும் ஜாவா தீவுகளுக்கும் இடையே ஜாவா கடலில் மேலே 32000 அடி உயரத்தில் பறந்ததாக கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.