செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By sivalingam
Last Modified: செவ்வாய், 23 மே 2017 (23:33 IST)

ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட இளைஞர்களுக்கு பொதுமக்கள் மத்தியில் பிரம்படி

இந்தோனேஷியாவில் கடந்த 2014ஆம் ஆண்டு ஓரினச்சேர்க்கை உறவு சட்டவிரோதமனது என்று அறிவிக்கப்பட்டது. ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுபவர்களுக்கு கடும் தண்டனை என சட்டமும் இயற்றப்பட்டது.



 


இந்த நிலையில் இந்த சட்டம் இயற்றிய மூன்று ஆண்டுகளில் முதல்முறையாக இரண்டு இளைஞர்கள் சிக்கி தண்டனை பெற்றுள்ளனர். இந்த இரு இளைஞர்களுக்கும் பொதுமக்கள் மத்தியில் 82 பிரம்படிகள் கொடுக்க உத்தரவிடப்பட்டது.

இந்த தண்டனையை நிறைவேற்றுவதற்காக மேடை ஒன்று அமைக்கப்பட்டது. சுமார் 1000 பொதுமக்கள் முன்னிலையில் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட இரு இளைஞர்களுக்கும் 82 பிரம்படி தண்டனைகள் நிறைவேற்றப்பட்டது. தண்டனை நிறைவேற்றபட்டபோது பலர் வீடியோ எடுத்து அதை ஃபேஸ்புக்கில் லைவ் ஆக பதிவேற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.