1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Modified: புதன், 10 ஆகஸ்ட் 2016 (15:50 IST)

இந்தியர்களை பயங்கரவாதிகளின் தூதர்களாக பார்க்கும் அமெரிக்கா

தலிபான் பயங்கரவாதிகளுக்கு விற்பனை செய்யலாம் என்று கருதி இந்தியர் ஒருவருக்கு அதி நவீன பென்ஸ் காரை அமெரிக்கா நிறுவனம் விற்பனை செய்ய மறுத்துள்ளது.


 

 
அமெரிக்க வாழ் இந்தியர் சுர்ஷித் பஸ்சி(50) என்பவர் அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் 30 ஆண்டுகளாக வசித்து வருகிறார். அவர் அங்குள்ள ஒரு கார் விற்பனை நிறுவனத்த்துக்கு அதி நவீன பென்ஸ் கார் ஒன்று வாங்க சென்றுள்ளார்.
 
அங்கு அவருக்கு கார் விற்பனை செய்ய அந்நிறுவனத்தின் மேலாளர் மறுத்து விட்டார். சர்ஷித் பஸ்சி காரனம் கேட்டுள்ளார். அதற்கு அந்நிறுவனத்தின் மேலாளர்,  நீங்கள் மிகவும் ஆபத்தான தலிபான் பயங்கரவாதிகள் இருக்கும் பகுதியை சேர்ந்தவர். அப்பகுதியை சேர்ந்தவர்கள் இதுபோன்ற விலை உயர்ந்த அதி நவீன காரை வாங்கி தலிபான் தீவிரவாதிகளிடம் விற்பனை செய்து விடுகிறார்கள். எனவே, உங்களுக்கு காரை விற்க முடியாது என கூறியுள்ளார்.
 
இதைத்தொடர்ந்து சுர்ஷித் பஸ்சி அந்த கார் நிறுவனத்தின் மீது ரூ.9 கோடி நஷ்டஈடு கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளார்.