திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : புதன், 4 ஏப்ரல் 2018 (11:49 IST)

பாலியல் தொல்லை: இந்திய யோகா ஆசிரியருக்கு சிறை

சிங்கப்பூரில் பயிற்சி பெற வந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த இந்திய யோகா ஆசிரியருக்கு 9 மாதம் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
 
கடந்த 2015-ஆம் ஆண்டு சிங்கப்பூர் நீதிமன்றத்தில் பெண் ஒருவர் தனக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதாக வழக்கு பதிவு செய்தார். அதில் இந்தியாவை சேர்ந்த யோகா பயிற்சியாளர் ராகேஷ் குமார் பிரசாத்திடம் யோகா பயிற்சி எடுக்க சென்றேன்.
 
அப்போது அவர் எனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். ஒரு முறை அல்ல, பல முறை அவர் இவ்வாறு நடந்து உள்ளார் என தெரிவித்திருந்தார். இந்த வழக்கு 2016-ம் ஆண்டு விசாரனைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பு வக்கில் பாலியல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள யோகா பயிற்சியாளர் ராகேஷ் குமாருக்கு ஓராண்டு சிறைதண்டனை வழங்க வேண்டும் என கூறினார்.
 
இதனையடுத்து நீதிபதி, அவருக்கு 9 மாத சிறை தண்டனையும், ஆயிரம் சிங்கப்பூர் டாலர் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.