வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By K.N.Vadivel
Last Modified: சனி, 1 ஆகஸ்ட் 2015 (00:20 IST)

இந்திய பெண் என்ஜினீயர் பிரபா அருண் குமார் கொலை: ரகசிய விசாரணையில் ஆஸ்திரேலிய காவல்துறை

ஆஸ்திரேலியாவில் இந்திய பெண் என்ஜினீயர் பிரபா அருண் குமார் கொலை வழக்கில் புதிய தகவலை ஆஸ்திரேலிய காவல்துறை வெளியிட்டுள்ளது.
 

 
ஆஸ்திரேலியாவின், சிட்னி அருகே பாராமட்டா பூங்கா உள்ளது. இங்கு, கடந்த மார்ச் மாதம், பெங்களூரைச் சேர்ந்த தகவல் தொழில்நுட்ப ஆலோசகர் பிரபா அருண் குமார் என்ற பெண், மர்ம நபர்களால் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் குற்றவாளிகளைப் பிடிக்க, ஆஸ்திரேலிய காவல்துறை சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்தது. இக்குழு தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகிறது.
 
இந்த நிலையில், பிரபா அருண் குமார் கொலை செய்யப்பட சில நிமிடங்கள் முன்பு, சிசிடிவிவில் பிரபா குமார் ஒருவருடன் பேசும் காட்சியை ஆஸ்திரேலிய காவல்துறை வெளியிட்டுள்ளது. ஆனால், அந்த நபர் முகம் அடையாளம் காண முடியவில்லை என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
 
மேலும், அப்குதியைச் சுற்றிலும் இருந்த கேமராக்களின் பதிவான காட்சிகளை சேகரித்து ரகிசாய விசாரணை நடைபெற்று வருகிறது.
 
இதனையடுத்து, இந்த கொலை வழக்கில் ஆஸ்திரேலிய காவல்துறை விசாரணைக்காக, இந்தியா வரக்கூடும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.