வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By K.N.Vadivel
Last Modified: திங்கள், 31 ஆகஸ்ட் 2015 (04:34 IST)

டாக்டர்.மொடடுகு விஜய் குப்தாவுக்கு சுன்ஹக் அமைதி பரிசு

சுன்ஹக் அமைதி விருது, இந்திய வேளாண்துறை விஞ்ஞானி, டாக்டர்.மொடடுகு விஜய் குப்தாவுக்கு கிடைத்துள்ளது.
 

 
நோபல் பரிசுக்காக இணையாக வர்ணிக்கப்படும் பரிசு சுன்ஹக் அமைதி விருது, ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பு கொண்டது.
 
இந்திய வேளாண்துறை விஞ்ஞானி டாக்டர்.மொடடுகு விஜய் குப்தா, ஆந்திராவின் பபடலா பகுதியைச் சேர்ந்தவர்.
 
இவர், இந்தியா மற்றும், பல்வேறு நாடுகளுக்கும், ஆற்றிய வேளாண் அறிவியல் மற்றும் மீன்வளர்ப்பு துறை சேவைகளை பாராட்டி தென்கொரிய அரசு இந்த விருதை வழங்கி கவுரப்படுத்தியுள்ளது.
 
இந்தியா மற்றும், பல்வேறு நாடுகளுக்கும் டாக்டர்.மொடடுகு விஜய் குப்தா ஆற்றிய வேளாண் அறிவியல் மற்றும் மீன்வளர்ப்பு துறை சேவைகளை பாராட்டியே சுன்ஹக் விருது வழங்கப்பட்டுள்ளது.
 
கிரிபடி தீவுகளின் அதிபர் அனோடி டோங்கும் இந்த விருதினை பகிர்ந்து கொள்கிறார் என்பது குறிப்பிடதக்கது.