வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Suresh
Last Updated : வெள்ளி, 28 நவம்பர் 2014 (13:38 IST)

கடற்படைத் தளங்களை அமைப்பதாக வெளியான தகவலை திட்டவட்டமாக மறுத்தது சீனா

சீனா, இந்தியப் பெருங்கடல் பகுதியில் 18 கடற்படைத் தளங்கள் அமைப்பதற்குத் திட்டமிட்டிருப்பதாக வெளியான தகவல் அடிப்படை ஆதாரமற்றது என்று சீனா திட்டவட்டமாக மறுத்துள்ளது.
 
மேற்கு-தெற்கு இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் இலங்கை, பாகிஸ்தான், மியான்மர் மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த 18 இடங்களில் கடற்படை தளங்களை அமைக்க சீனா திட்டமிட்டிருப்பதாக செய்தி வெளியானது.
 
மேலும் சீனா உதவியுடன் இலங்கையின் கொழும்பு துறைமுகம் புதுப்பிக்கப்பட்டதாகவிம் அங்கு, சீனாவின் நீர்மூழ்கி கப்பலும் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. 
 
இந்நிலையில் இந்தியப் பெருங்கடல் பகுதியில் 18 கடற்படை தளங்களை அமைப்பதாக வெளியான செய்தியைப் பற்றி சீன தேசிய பாதுகாப்புத் துறை செய்தித் தொடர்பாளர் கெங் யான் ஷெங்கிடம் செய்தியாளர்கள் கேட்டனர்.
 
இதற்கு அவர்கள் கடற்படை தளம் தொடர்பாக வெளியான செய்தியில் உண்மையில்லை என்றும் அது அடிப்படை ஆதாரமற்றது என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
 
மேலும் தொழில்நுட்ப காரணங்களுக்காக சீன நீர்மூழ்கி கப்பல் கொழும்பு துறைமுகத்திற்கு இரண்டுமுறை சென்றதாகவும் அவர் கூறினார்.