1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 29 செப்டம்பர் 2016 (15:03 IST)

பாராசூட் மூலம் குதித்து பாக்.கில் 8 இடங்களை தாக்கிய இந்திய ராணுவம்

பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் மொத்தம் 8 இடங்களில் தாக்கியுள்ளது இந்திய விமானப்படை. இந்த தாக்குதலில் ராணுவமும் கூடவே சேர்ந்து நடத்திய தாக்குதலால் தீவிரவாதிகள் நிலைகுலைந்து போய் விட்டதாக ராணுவத் தரப்பு தெரிவிக்கின்றன. 

 
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் தொடர்ந்து ஊடுறுவலை நடத்தி வந்தது பாகிஸ்தான். இந்த நிலையில்தான் உரி தாக்குதல் வந்து சேர்ந்தது. இதற்குப் பழிவாங்கும் வகையில் நேற்று அதிரடி தாக்குதலை இந்திய விமானப்படையும், ராணுவமும் சேர்ந்து நடத்தின.
 
எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் மொத்தம் 8 இடங்களில் விமானப்படை விமானங்கள் குண்டு பொழிந்துள்ளன. இதில் பல நூறு தீவிரவாதிகள் கொல்லப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.  விமானப்படை ஹெலிகாப்டர்கள் மூலம் பாராசூட் வழியாக பாகிஸ்தானுக்குள் குதித்து இந்திய ராணுவத்தின் சிறப்புப் படைப் பிரிவினர் அதிரடியாக தாக்கியுள்ளனர். 
 
பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம் மீது இந்திய ராணுவத்தின் விமானப்படை தாக்குதலில் இரு பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். உரி தாக்குதல் நடைபெற்ற பிறகு, கடந்த 10 நாட்களாக, பாகிஸ்தானின் முப்படைகளும், தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன. 
 
பாகிஸ்தானின் ரேடார்கள் இந்திய எல்லையில் இருந்து விமானங்கள் நுழைகிறதா என்பதை கண்காணித்தபடி இருந்தன. இத்தனை முன்னேற்பாடுகளுக்கு நடுவேயும், இந்திய ராணுவம் விமானம் 17 வருடங்களுக்கு பின்னர்ம், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் எல்லைக்குள் பாரசூட் மூலம் குதித்து, தங்களது இலக்கான தீவிரவாத முகாம்கள் மீது அதிரடி தாக்குதலை நடத்திவிட்டு, வெற்றிகரமாக தாய் நாட்டுக்கு திரும்பி வந்துள்ளது.
 
பொக்ரானில் யாருக்கும் தெரியாமல் அணு குண்டை சோதித்து பார்த்து அமெரிக்காவையே ஆட்டம் காண வைத்த, இந்தியாவுக்கு, இந்த தாக்குதல் ஒன்றும் பெரிய விஷயமில்லை.