அமெரிக்காவில் வழிப்பறி திருடர்களால் கடத்தப்பட்ட இந்திய பொறியாளர்! பெரும் பரபரப்பு

Last Modified ஞாயிறு, 6 ஜனவரி 2019 (22:21 IST)
அமெரிக்காவின் டெட்ராய்ட் நகரில் இந்திய பொறியாளர் ஒருவர் வழிப்பறி திருடர்களால் கடத்தப்பட்ட சம்பவம் அந்நாட்டில் பெரும் பரபரப்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானாவை சேர்ந்த பொறியாளர் சாய்கிருஷ்ணா என்பவர் கடந்த சில ஆண்டுகளாக அமெரிக்காவில் பணிபுரிந்து வருகிறார். சமீபத்தில் இரவு, பணி முடிந்து தனது காரில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்த போது திடீரென துப்பாக்கி முனையில் பொறியாளர் சாய் கிருஷ்ணாவை சிலர் மறித்து கடத்தியுள்ளனர். அதன்பின் ஒதுக்குப்புறமான இடத்தில் காரை நிறுத்தி அவரிடம் இருந்த ரொக்கம், செல்போன் , கிரெடிட், டெபிட் கார்டுகள் உள்ளிட்டவற்றைப் பறித்துதோடு சாய்கிருஷ்ணாவை துப்பாக்கியால் சுட்டுவிட்டு கீழே தள்ளிவிட்டு காரையும் கடத்தி சென்றுள்ளனர்.

இந்த நிலையில் சாலையில் துப்பாக்கி குண்டடி பட்டு உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த சாய் கிருஷ்ணாவை அந்த வழியாக சென்ற ஒருவர் பார்த்து உடனே காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளார். தகவல் அறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சாய்கிருஷ்ணாவை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். தற்போது சாய்கிருஷ்ணா உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகின்றன


இதில் மேலும் படிக்கவும் :