திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Siva
Last Updated : புதன், 26 அக்டோபர் 2022 (11:39 IST)

உக்ரைன் நாட்டில் இருந்து உடனே வெளியேறுங்கள்: இந்தியர்களுக்கு தூதரகம் அறிவுரை!

Ukraine
உக்ரைன் நாட்டில் உள்ள இந்தியர்கள் உடனே வெளியேற வேண்டும் என இந்திய தூதரகம் இந்தியர்களுக்கு அறிவித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
கடந்த பிப்ரவரி மாதம் முதல் உக்ரைன் மற்றும் ரஷ்யா நாடுகளுக்கு இடையே போர் நடைபெற்று வரும் நிலையில் உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தற்போது கொடூரமாக தாக்குதல் நடத்தி வருகிறது
 
இதனை அடுத்து உக்ரைன் தலைநகர் கீவ் உள்பட பல்வேறு பகுதியில் உள்ள இந்தியர்கள் உடனடியாக வெளியேறும் படி  உக்ரைன் நாட்டில் உள்ள இந்திய தூதரகம் அறிவித்துள்ளது
 
இதனை அடுத்து உக்ரைன் நாட்டில் உள்ள இந்தியர்கள் நாடு திரும்ப தயாராகி வருவதாக கூறப்படுகிறது. உக்ரைன் மீது ரஷ்யாவின் தாக்குதல் தீவிரம் அடைந்துள்ளதால் இந்திய தூதரகம் இந்தியர்களுக்கு இந்த அறிவுரையை கொடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva