1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 24 ஜூன் 2020 (13:52 IST)

இந்திய படையும், சீன படையும் ஒன்று சேர்ந்த அணிவகுப்பு! – ரஷ்யாவில் கொண்டாட்டம்!

ரஷ்யாவில் நடைபெற்று வரும் இரண்டாம் உலக போர் நிறைவடைந்த நாளின் 75வது ஆண்டு விழாவில் இந்திய – சீன ராணுவ படைகள் கலந்து கொண்டுள்ளன.

உலக நாடுகள் முழுவதும் ஏறத்தாழ இரண்டாக பிரிந்து நடத்திய இரண்டாம் உலகப்போர் முடிந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இந்த 75 ஆண்டு நிறைவு விழா ரஷ்யாவின் மாஸ்கோ நகரில் நடைபெற்று வருகிறது. இதில் பிரிட்டிஷ் ஆதரவு நாடுகள் உள்ளிட்டவை தங்கள் ரஅணுவத்தினரோடு பங்கேற்று வருகின்றனர்.

இந்தியாவிலிருந்து பாதுகாப்புதுறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இந்த விழாவில் கலந்து கொண்டுள்ளார். இந்திய ராணுவம் கலந்து கொண்டுள்ள இந்த அணிவகுப்பில் சீன ராணுவமும் கலந்து கொண்டுள்ளது. முன்னதாக இந்திய – சீன விவகாரத்தில் சமரசம் பேச தயார் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்திருந்த நிலையில், ரஷ்ய வெளியுறவு துறை அமைச்சர் “இந்தியா – சீனா இடையேயான பிரச்சினைகளில் யாரும் தலையிட தேவையில்லை. அதை சம்பந்தப்பட்ட இரு நாடுகளுமே சரிசெய்து கொள்ளும்” என கூறியுள்ளார்.