1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 22 செப்டம்பர் 2021 (08:13 IST)

மற்ற நாடுகளுக்கு தடுப்பூசி வழந்த தயார்! – இந்தியா அறிவிப்பிற்கு உலக சுகாதார அமைப்பு வரவேற்பு!

இந்தியாவிலிருந்து மற்ற நாடுகளுக்கு தடுப்பூசி ஏற்றுமதி தொடங்க உள்ளதாக வெளியான அறிவிப்பிற்கு உலக சுகாதார அமைப்பு வரவேற்பு தெரிவித்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் கடந்த ஒன்றரை வருடமாக இருந்து வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் நாள்தோறும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்ததால் தடுப்பூசி உற்பத்தியை அதிகரித்ததுடன், மற்ற நாடுகளுக்கு தடுப்பூசி ஏற்றுமதி செய்வதையும் நிறுத்தி வைத்தது.

இந்நிலையில் தற்போது இந்தியா முழுவதும் ஏராளமானோருக்கு தடுப்பூசி போடப்பட்டு விட்டதாலும், பாதிப்புகள் குறைய தொடங்கியுள்ளதாலும் தடுப்பூசிகளை பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய அனுமதிக்க உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பிற்கு உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன் வரவேற்பு தெரிவித்துள்ளார்.