வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Siva
Last Updated : சனி, 10 ஆகஸ்ட் 2024 (21:43 IST)

மாலத்தீவில் குடிநீர் திட்டம் தொடக்கம்.. 110 மில்லியன் டாலர் இந்தியா உதவி..!

மாலத்தீவில் இந்தியா உதவியுடன் புதிய குடிநீர் திட்டம் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மூன்று நாள் அரசு முறை பயணமாக மாலத்தீவு சென்ற இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் அந்நாட்டின் அதிபர் மாளிகையில் நடைபெற்ற குடிநீர் திட்ட தொடக்க விழாவில் கலந்து கொண்டார்.

இந்த குடிநீர் திட்டம் இந்தியா நிதி உதவியுடன் 110 மில்லியன் டாலர் மதிப்பில் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் இந்த திட்டத்தின் மூலம் மாலத்தீவில் உள்ள 28 தீவுகளில் உள்ள மக்கள் பயனடைவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மாலத்தீவில் உள்ள மக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் வழங்கப்படுவது உறுதி என்றும் சுமார் 28 ஆயிரம் மக்கள் இந்த திட்டத்தால் பயனடைவார்கள் என்றும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மாலத்தீவு அதிபர் முகமது மூயிஸ் அவர்கள் கூறிய போது மாலத்தீவுக்கு இந்தியா தொடர்ந்து ஆதரவளித்து வருகிறது. குறிப்பாக பிரதமர் நரேந்திர மோடி எங்களுக்கு அளித்து வரும் ஆதரவுக்கு நன்றி. பாதுகாப்பு, மேம்பாடு, கலாச்சார பகிர்வு ஆகியவற்றில் இந்தியா மற்றும் மாலத்தீவு நாடுகள் நெருக்கமாக உள்ளன. இந்த இரு நாடுகளுக்கு இடையிலான கூட்டாண்மை தொடரும் என்று தெரிவித்துள்ளார்.

Edited by Siva