1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 21 ஏப்ரல் 2021 (11:51 IST)

ரெட் லிஸ்ட் பட்டியலில் இந்தியா: விமான சேவை முற்றிலும் ரத்து!

வரும் 24 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை பிரிட்டனுக்கு இயக்கவிருந்த அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்படுவதாக ஏர் இந்தியா தெரிவித்துள்ளது. 

 
கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. எனினும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் மாநிலம் தோறும் மீண்டும் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் 2,95,041 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்புகள் 1,56,16,130 ஆக உயர்ந்துள்ளது.
 
எனவே, இந்தியாவை ரெட் லிஸ்ட் பட்டியலில் பிரிட்டன் சேர்த்திருந்தது குறிப்பிடத்தக்கது. பிரிட்டனில் இருந்து இந்தியா வரவும், இந்தியாவில் இருந்து பிரிட்டன் செல்லவும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன என ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.