வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. உலகச் செய்திகள்
Written By Suresh
Last Modified: வெள்ளி, 2 மே 2014 (12:25 IST)

உலகின் 100 சிறந்த கல்வி நிறுவனங்கள்: 87ஆவது இடத்தில் இந்தியாவின் குவஹாத்தி ஐஐடி

'டைம்ஸ் ஹையர் எஜுகேஷன்' வார இதழ் வெளியிட்டுள்ள உலகின் தலைசிறந்த 100 கல்வி நிறுவனங்களின் பட்டியலில் அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ள குவஹாத்தி ஐஐடி (இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி) கல்வி நிறுவனம் 87ஆவது இடத்தை பிடித்துள்ளது.
 
இங்கிலாந்து நாட்டின் தலைநகர் லண்டனிலிருந்து வெளியாகும் "டைம்ஸ் ஹையர் எஜுகேஷன்' வார இதழ், உலகத்தில் கடந்த 50 ஆண்டுகளுக்குள் தொடங்கப்பட்ட பல்களைக்கழகங்களில், சிறந்த 100 பல்கலைக்கழகங்களின் பட்டியலை தயாரித்து வெளியிட்டு வருகிறது. அதன்படி, 2014ஆம் ஆண்டுக்கான பட்டியலை வெளியிட்டுள்ளது.
 
அதில் இந்தியாவிலுள்ள குவஹாத்தி ஐஐடி, 87ஆவது இடத்தை பிடித்துள்ளது. குவஹாத்தி ஐஐடி யுடன் சேர்ந்து, போர்ச்சுகல் நாட்டின் "நியூ யூனிவர்சிட்டி ஆஃப் லிஸ்பன்' மற்றும் ஆஸ்திரேலியா நாட்டின் "யூனிவர்சிட்டி ஆஃப் வெஸ்ட்ர்ன் சிட்னி' ஆகியவையும் 87ஆவது இடத்தை வகிக்கின்றன.
 
தென்கொரியாவின் "போஹாங் யூனிவர்சிட்டி ஆஃப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி' கல்வி நிறுவனம் தொடர்ந்து 3ஆவது முறையாக இந்த ஆண்டும் முதலிடத்தை கைப்பற்றி சாதனை படைத்துள்ளது. சுவிட்சர்லாந்து நாட்டின் "இகோல் பாலிடெக்னிக் ஃபெடராலி டி லூசன்' கல்வி நிறுவனம் 2 ஆவது இடமும், தென்கொரியா நாட்டின் மற்றொரு கல்வி நிறுவனமான "கொரியா அட்வான்ஸ்டு இன்ஸ்டிட்யூட் ஆஃப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி' கல்வி நிறுவனம் 3ஆவது இடம் பெற்றுள்ளன.
 
'டைம்ஸ் ஹையர் எஜுகேஷன்' வார இதழ் வெளியிட்டுள்ள பட்டியலில், இந்தியாவைச் சேர்ந்த எந்த கல்வி நிறுவனமும் இதுவரை முதல் 100 இடங்களுக்குள்குள் இடம் பெற்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.