1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 14 டிசம்பர் 2016 (10:53 IST)

48 நாடுகள் கடலில் மூழ்கும் அபாயம்!!

உலகில் ஏற்படும் பருவநிலை மாற்றத்தால் பூமி அதிக அளவு வெப்பமாகி, பனிப் பாறைகள் உருகுகின்றன. இதனால் கடல் நீர் மட்டம் அதிகரித்துக் கொண்டே வருகிறது.


 
 
இந்நிலை நீடிக்குமானால் பல்வேறு நாடுகள் அழியும் நிலை ஏற்படும். இதற்காக உலக நாடுகள் அனைத்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.
 
ஐநாவில் நடை பெற்று வரும் பருவ நிலை மாற்ற மாநாட்டின் போது பூமியின் வெப்ப நிலையை கட்டுக்குள் கொண்டுவர சில நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
 
அதன்படி பூமியின் வெப்ப நிலை அதிகரிப்பை சுமார் 1.5 டிகிரி செல்சியஸ் அளவுக்கு கட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்று  தீர்மானித்துள்ளன என கூறப்படுகிறது.
 
இதனால் 2050 ஆம் ஆண்டிற்குள் புதுபிக்கத்தக்க எரிசக்தியை 100 சதவீதம் பயன்படுத்த முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
 
கூட்டமைப்பில் பிலிப்பைன்ஸ், வங்காளதேசம், கென்யா, இலங்கை உள்ளிட்ட நாடுகள் கலந்து கொண்டது.