வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : செவ்வாய், 27 ஜனவரி 2015 (15:33 IST)

ஒரு லட்சத்திற்கு மேற்பட்டோரின் வேலையை காலி செய்கிறதா ஐபிஎம்?

ஒரு லட்சத்திற்கு மேற்பட்டோரை வேலையை விட்டு காலி செய்ய இருப்பதாக ஐபிஎம் நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
 
இதற்கு முன்பாக 'ஐபிஎம்' நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கைகளின் படி, உலகம் முழுவதிலும் உள்ள ஊழியர்களில் 1,11,000 பேரை வேலையை விட்டு நீக்க முடிவு செய்துள்ளதாக பத்திரிக்கைகள் தகவல்கள் வெளியிட்டன. இது கார்ப்பரேட் வரலாற்றில் இது மிகவும் மோசமான நடவடிக்கை என்று ஊடகங்கள் விமர்சனம் செய்துள்ளன.
 

 
ஆனால் அந்நிறுவனமோ இதுகுறித்து மேற்கொண்ட தகவல்களை தரவும், 1 லட்சம் பேர் வேலை நீக்கம் செய்யப்பட உள்ளதாக வெளியான தகவல்களை மறுத்துள்ளது.
 
இது குறித்து அந்நிறுவன அதிகாரி குறிப்பிடுகையில், “ஐபிஎம் நிறுவனம் ஆட்குறைப்பு நடவடிக்கையில் இறங்கியிருப்பதாக வந்திருக்கும் தகவல்கள் வெறும் வதந்திகளே. இது நகைப்பிற்குறியது. வதந்திகளுக்கு எந்த பதிலும் சொல்ல முடியாது” என்று கூறியுள்ளது.
 
மேலும், தாங்கள் எந்த சீரமைப்புப் பணிகளையும் மேற்கொள்ளப் போவதில்லை என்றும் கடந்த ஆண்டு இருந்த நிலைமையையே இந்த ஆண்டும் தொடரப் போவதாக கூறியுள்ளது.
 
கடந்த வாரம் ஐபிஎம் வெளியிட்ட அறிக்கையில் டிசம்பர் மாதம் வரையிலான மூன்று மாதங்களில் தங்கள் லாபத்தில் 12% குறைந்துள்ளதாக 16 பில்லியன் யூரோ (இந்திய மதிப்பில் பத்து லட்சம் கோடிக்கும் மேல்) தெரிவித்துள்ளது.
 
இதே போல் லாபம் குறைந்ததை காரணம் காட்டி 1993ஆம் ஆண்டும் 60,000 பேரை அந்நிறுவனம் வேலையை விட்டு நீக்கியது நினைவுக்கூரத்தக்கது.