வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Siva
Last Updated : வெள்ளி, 1 டிசம்பர் 2023 (07:40 IST)

ஜோ பைடன் தேர்தலில் மீண்டும் போட்டியிட்டால் வாக்களிக்க மாட்டேன்: எலான் மஸ்க்

அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் ஜோ பைடன் போட்டியிட்டால் அவருக்கு வாக்களிக்க மாட்டேன் என எலான் மஸ்க் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலுக்கு ஜோ பைடன்  போட்டியிடுவது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அவரை மீண்டும் ஜனாதிபதியாக தன்னால் கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை என்று எலான் மஸ்க் பேட்டி ஒன்று கூறியுள்ளார்.  

வெள்ளை மாளிகையில் நடைபெறும் மின்சார வாகனங்களுக்கான மாநாட்டிற்கு தனக்கு அழைப்பு விடுக்கவில்லை என்று கூறிய அவர், தான் அவமதிக்கப்பட்டதால் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் ஜோ பைடனுக்கு வாக்களிக்க மாட்டேன் என்றும் அவருக்கு ஆதரவு தெரிவிக்க மாட்டேன் என்றும் பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.  

2020 ஆம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் ஜோ பைடனுக்கு வாக்களித்த எலான் மஸ்க் மீண்டும் போட்டியிட்டால் வாக்களிக்க மாட்டேன் என்று கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Edited by Siva