வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 23 அக்டோபர் 2018 (14:56 IST)

ஹிமாலயன் வயாகராவுக்கு ஆபத்து –ஆராய்ச்சியாளர்கள் கருத்து

இந்தியா, சீனா மற்றும் நேபாளத்தில் மட்டுமே விளையக்கூடிய ஓபியோகோர்டிசெப்ஸ் சினென்சிஸ் எனும் அபூர்வ வகைக் காளான் அழிவில் விளிம்பில் இருப்பதாக ஆரய்ச்சியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

யார்ஷா கும்பா என்றழைக்கப்படும் சிறிய வகைக் காளான் இந்தியாவின் இமயமலை பகுதிகளில் மட்டுமே விளையக்கூடியது. இந்த காளானை அங்குள்ள மக்கள் பல நோய்களுக்கு மருந்தாகப் பயன்படுத்தி வருகின்றனர். முக்கியமாக ஆண்களின் ஆண்மைக் குறைவு பிரச்சனைக்கு இதைப் பயன்படுத்துவதால் இது உலக அளவில் ஹிமாலயன் வயாகரா என அழைக்கப்பட்டு வருகிறது. இந்த காளானை தண்ணீரில் கொதிக்க வைத்து குடித்தால் இதன் மருத்துவப் பலன்கள் அனைத்தும் கிடைக்குமென அந்த பகுதி மக்கள் நம்பி வருகின்றனர்.

உலகிலேயே விளையும் பொருட்களிலேயே அதிக விலைக்கு விற்கக்கூடியப் பொருளாக யார்ஷா கும்பா இருந்து வருகிறது. இதன் மதிப்பு தங்கத்தை விட அதிகமாகும். இந்த காளான் வளர வெப்பநிலை 0 டிகிரி செல்சியஸ் அளவுக்கு குறைவாக இருக்க வேண்டும். எனவே இந்த வெப்பநிலையில் உள்ள ஹிமாலயாஸ், நேபாளம் மற்றும் திபெத் போன்ற பகுதிகளில் மட்டுமே விளைகின்றன. இந்த பொருளுக்கு சீனா மற்றும் ரஷ்யாவில் பெருமளவு மார்க்கெட் உள்ளது.

உலகளவில் ஏற்பட்டுள்ள தட்பவெப்ப மற்றும் சூழ்நிலை மாற்றங்களால் பூமியின் வெப்பம் கணிசமான அளவில் உயர்ந்து வருகிறது. இந்த வெப்பநிலை உயர்வாலும் அதிகப்படியான அறுவடையாலும் தற்போது இந்த யார்ஷா கும்பாவின் அளவு குறைந்து வருகிறது. இதனால் இந்த காளான் அருகிவரும் ஒரு விளைபொருளாக மாறிவருவதாக ஆராய்ச்சியாளர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.