சமீபத்திய நேபாள் நிலநடுக்கம் எதிரொலி: பலி எண்ணிக்கை 76 ஆக அதிகரிப்பு

Mahalakshmi| Last Modified வியாழன், 14 மே 2015 (11:03 IST)
நேபாள் நாட்டில் இரண்டாவது முறையாக அரங்கேறிய நிலநடுக்கத்தில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 76 ஆக உயர்ந்துள்ளது.
 
உலகம் முழுவதிலும் உள்ள பல்வேறு பகுதிகளில் கடந்த மே, 12 ஆம் தேதி அன்று கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனின் தாக்கம் நேபாள், இந்தியா, சீனா போன்ற நாடுகளிலும் உணரப்பட்டது. இதனால் பல இடங்களில் கட்டிடங்கள் குலுங்கின. அலுவலகத்தில் இருந்த அனைவரும் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.
இந்த நிலநடுக்கத்தால் நேபாள் நாடு மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. காத்மாண்டுவின் மையப்பகுதியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.3 ஆக பதிவாகி இருந்தது. இதில் கட்டிட இடிபாடுகளில் சிக்கி பல அப்பாவி பொதுமக்கள் பலர் பலியாகியுள்ளனர். தற்போது இந்த பலி எண்ணிக்கை 76 ஆக உயர்ந்துள்ளது. மேலும் பலர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
 
இதேபோல் கடந்த மாதம் நிகழ்ந்த நேபாள் நிலநடுக்கத்தில் சிக்கி 8230 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


இதில் மேலும் படிக்கவும் :