இந்தியர் சுட்டுக்கொலை: டிரம்ப் காரணம், ஹிலாரி கண்டனம்!!
அமெரிக்காவில் இந்திய பொறியாளர் ஸ்ரீனிவாஸ் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு ஹிலாரி கிளின்டன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் உள்ள மதுபான விடுதியில், ஸ்ரீனிவாஸ் என்ற இந்தியர், 51 வயதான ஆதம் புரின்டன் என்பவரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்நிலையில் அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியின் சார்பாக போட்டியிட்ட ஹிலாரி, ஸ்ரீனிவாஸ் மரணம் குறித்து கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து, ஹிலாரி கிளின்டன் தனது டுவிட்டர் பக்கத்தில் நாட்டில் அச்சுறுத்தல்களும் வெறுப்பினவாதக் குற்றங்களும் உயர்ந்துகொண்டே செல்கின்றன. இதற்கு நாட்டின் ஜனாதிபதி தான் காரணம் என்பதை நாம் சொல்லத் தேவையில்லை. குற்றங்களை ஒடுக்க வேண்டிய கட்டாயத்தில் டிரம்ப் இருக்கிறார் என தெரிவித்துள்ளார்.