Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஜூலை 6-ல் விஜய்மல்லையா இந்தியாவிடம் ஒப்படைப்பா?


sivalingam| Last Modified புதன், 14 ஜூன் 2017 (05:43 IST)
இந்திய வங்கிகளில் ரூ.9000 கோடி வரை கடன் பெற்றுவிட்டு இங்கிலாந்துக்கு தப்பிச்சென்றுவிட்ட பிரபல தொழிலதிபர் விஜய்மல்லையாவின் ஜாமீன் வழக்கு நேற்று லண்டனில் விசாரணைக்கு வந்தது.  வெஸ்ட்மினிஸ்டர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜூலை 6ஆம் தேதிக்கு வழக்கை  ஒத்திவைத்தனர். மேலும் அன்றைய தினம் விஜய்மல்லையா நேரில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது.


 


ஜூலை 6ஆம் தேதி விஜய்மல்லையாவை இந்தியாவிடம் ஒப்படைப்பதா? என்பது குறித்த உத்தரவை நீதிபதிகள் பிறப்பிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அன்றைய தினம் அவ்வாறு ஒரு உத்தரவை நீதிபதிகள் பிறப்பித்தால் லண்டன் உள்துறை செயலாளர் விஜய்மல்லையாவை இந்தியாவிடம் ஒப்படைப்பார் என்று எதிர்பாக்கப்படுகிறது.

இந்த நிலையில் நீதிமன்ற வாசலில் இந்திய ஊடகங்களுக்கு பேட்டி அளித்த விஜய் மல்லையா, 'என் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை. நான் குற்றம் ஏதும் செய்யவில்லை, நிரபராதி என நிரூபிக்க போதுமான ஆதாரங்கள் உள்ளன என்று விஜய் மல்லையா கூறியுள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :