திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 25 ஜூலை 2022 (10:44 IST)

மியாமிக்கு தப்பி சென்ற அகதிகள் படகு கவிழ்ந்தது! – 17 பேர் பலி!

Bahamas
ஹைதி நாட்டிலிருந்து மியாமிக்கு தப்பி செல்ல முயன்ற அகதிகள் படகு கடலில் மூழ்கிய சம்பவம் சோகத்தை ஏற்பட்டுத்தியுள்ளது.

ஹைதி நாட்டிலிருந்து பஹாமாஸ் வழியாக பல ஹைதி நாட்டு அகதிகளை ஏற்றிக் கொண்டு படகு ஒன்று அமெரிக்காவின் மியாமி கடற்கரை நோக்கி பயணித்துள்ளது. அப்போது வீசிய கடும் அலைகளில் படகு கவிழ்ந்ததால் பெண்கள், குழந்தைகள் உட்பட 17 பேர் உயிரிழந்துள்ளனர்.

சம்பவம் அறிந்து அப்பகுதிக்கு விரைந்த பஹாமாஸ் கடற்காவல் படையினர் விபத்தில் மாயமானவர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். உயிருடன் தத்தளித்த இருவர் மீட்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர். இந்த சம்பவத்திற்கு பஹாமாஸ் அதிபர் இரங்கல் தெரிவித்துள்ளார்.