செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 25 ஆகஸ்ட் 2020 (12:47 IST)

ஒரு வருஷம் கேப்; போராட்டத்துக்கு லீவ்! மீண்டும் பள்ளி சென்ற க்ரேட்டா!

பருவநிலை மாற்றம் குறித்த தீவிரமான போராட்டத்தை மேற்கொண்ட சிறுமி க்ரேட்டா தன்பெர்க் ஒரு வருடம் கழித்து மீண்டும் பள்ளிக்கு திரும்பியுள்ளார்.

உலகம் முழுவதும் சுற்றுசூழலில் ஏற்படும் மாற்றங்களையும், பருவ நிலை மாற்றங்களையும் குறித்து உலக நாடுகள் திரும்பி பார்க்க வைத்தவர் சிறுமி க்ரேட்டா தன்பெர்க். காலநிலை மாற்றத்திற்கு காரணமாக கார்பன் அதிகளவில் எரிக்கப்படுதல் போன்றவற்றை கட்டுப்படுத்த உலக நாடுகளுக்கு கோரிக்கை விடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட இந்த ஸ்வீடன் சிறுமி கடந்த ஓராண்டு காலமாக உலகம் முழுவதும் பல நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல கருத்தரங்குகளில் பருவநிலை மாற்றம் குறித்து பேசி வந்துள்ளார்.

இந்நிலையில் ஒருவருடம் கழித்து மீண்டும் பள்ளிக்கு புறப்பட்டுள்ள க்ரேட்டா “பள்ளியுடனான எனது ஒரு வருட இடைவெளி முடிந்தது. மீண்டும் பள்ளிக்கு செல்வது மகிழ்ச்சியாக உள்ளது” என பள்ளிக்கு பேக் மாட்டி, சைக்கிளில் போவதை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.