திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 13 ஜூலை 2022 (14:58 IST)

மாலத்தீவில் துரத்தும் மக்கள்.. துபாய் பறக்கும் கோத்தா? – பரபரப்பு தகவல்கள்!

இலங்கை அதிபர் கோத்தாபய ராஜபக்சேவுக்கு மாலத்தீவில் எதிர்ப்புகள் வலுத்துள்ளதால் துபாய் செல்ல திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் போராட்டம் வெடித்துள்ளது. இதனால் போராட்டக்காரர்கள் இலங்கை அதிபர் மாளிகையை சூறையாடிய நிலையில், அங்கிருந்து தப்பிய அதிபர் கோத்தாபய ராஜபக்சே தலைமறைவானார்.

அவர் மாலத்தீவுக்கு தப்பி சென்று விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் மாலத்தீவில் பதுங்கியுள்ள கோத்தபய அங்கிருந்து வெளியேற வேண்டும் என மாலத்தீவை சேர்ந்த மக்களே அப்பகுதியில் போராட்டங்களை தொடங்கியுள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனால் சிக்கலில் மாட்டியுள்ள கோத்தாபய ராஜபக்சே தனது குடும்பத்தாருடன் தப்பி துபாய் செல்ல திட்டமிட்டுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. நாட்டை விட்டு ஒவ்வொரு நாடாக கோத்தபய தப்பி செல்லும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.