வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Siva
Last Updated : திங்கள், 19 டிசம்பர் 2022 (10:52 IST)

ஒட்டுமொத்த உலகமும் கூகுளில் தேடியது இதை மட்டும் தான்: சுந்தர் பிச்சை

sundar pichai
ஒட்டுமொத்த உலகமும் நேற்று உலக கோப்பை கால்பந்து போட்டியை தான் கூகுளில் தேடியது என அந்நிறுவனத்தின் சிஇஓ சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.
 
நேற்று நடைபெற்ற உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தை உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்கள் நேரலையில் பார்த்தனர் என்பதும்,  என்பதால் ஆயிரக்கணக்கானோர் நேரில் சென்று பார்த்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
 இந்த நிலையில் நேற்று இரவு முதல் உலகக் கோப்பை கால்பந்து போட்டியை தான் ஒட்டுமொத்த உலகமே கூகுளில் தேடி உள்ளதாக கூகுள் நிறுவனத்தின் சிஇஓ சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார். 
 
உலக கோப்பை கால்பந்து போட்டி இறுதி போட்டி குறித்த தேடல் தான் கடந்த 25 ஆண்டுகளில் அதிகமான டிராபிக்கை பதிவு செய்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். சுந்தர் பிச்சையின் இந்த தகவல் பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.
 
Edited by Siva