திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 6 ஜூலை 2021 (09:41 IST)

இந்தியா மீது விதித்த பயண தடையை நீக்க ஜெர்மனி முடிவு

இந்தியாவில் இருந்து விமானத்தில் வரும் பயணிகளுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டு உள்ளதாக ஜெர்மனி தெரிவித்துள்ளது.
 
கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது தினசரி பாதிப்புகள் மெல்ல குறைய தொடங்கியுள்ளது. முன்னதாக 1 லட்சத்திற்கும் அதிகமாக இருந்த பாதிப்புகள் சமீபகாலமாக 50 ஆயிரத்திற்கு கீழ் குறைந்துள்ளது. 
 
கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்த காரணத்தால் பல்வேறு நாடுகள் இந்தியாவுடனான விமான போக்குவரத்துக்கு தற்காலிக தடை விதித்தன. இதில் ஜெர்மனியும் ஒன்று. ஆனால் இப்போது பாதிப்பு குறைந்துள்ளதால் இங்கிலாந்து, போர்ச்சுகல் மற்றும் இந்தியா ஆகிய 3 நாடுகளை சேர்ந்தவர்கள் மற்றும் அந்த நாடுகளில் இருந்து விமானத்தில் வரும் பயணிகளுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டு உள்ளதாக ஜெர்மனி தெரிவித்துள்ளது.