1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: சனி, 13 ஆகஸ்ட் 2016 (14:38 IST)

முஸ்லீம் பெண்கள் அணியும் நீச்சல் உடைக்கு தடை - மீறினால் அபராதம்

முஸ்லீம் பெண்கள் அணியும் வித்தியாசமான நீச்சல் உடைக்கு தடைவிதித்து பிரான்ஸ் நாட்டில் உள்ள கேன்ஸ் நகரம் உத்தரவிட்டுள்ளது.
 

 
பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக சில முஸ்லிம் பெண்கள் அணியும் முழு உடல் நீச்சல் உடைக்கு பிரான்சில் உள்ள கேன் நகரில் தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
 
இது குறித்து அந்நகரின் மேயர் டேவிட் லிஸ்னர்ட் வெயிட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டதாவது :-
 
பிரான்ஸ் மற்றும் அதன் பல்வேறு பகுதிகளில் மதம் சார்ந்த தீவிரவாத தாக்குதல்கள் தொடர்ந்து நடந்த வண்ணம் உள்ளது. எனவே மதச்சார்பின்மையை நிலை நாட்டினால் தான் இந்த தாக்குதல்கள் முற்றுப்பெறும். முன்னதாக கேன்ஸ் நகரில் உள்ள கடற்கரைக்கு செல்பவர்கள் இதை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்.
 
அங்கு செல்லும் முஸ்லீம் பெண்கள் தங்களுக்கென வடிவமைத்த நீச்சல் உடைகளை தவிர்க்க வேண்டும். தடையை மீறி அந்த ஆடை அணிந்து கடற்கரைக்கு வரும் பெண்களிடம் 40 டாலர்கள் வரை அபராதம் விதிக்கப்படும்.
 
இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.