விமானங்களை தகர்க்க கழுகுகள்: பிரான்ஸ் அரசு புதிய யுக்தி!!
ஆளில்லா விமானங்கள் மூலம் நடைபெறும் பயங்கரவாத செயல்களை அழிக்க பிரான்ஸ் கழுகுகளை ஈடுபடுத்தி வருகிறது.
தற்போதைய உலகளாவிய பிரச்னையாக பயங்கரவாதம் உருவெடுத்துள்ளது. இதில் பயங்கரவாதச் செயல்களை அரங்கேற்ற தீவிரவாதிகள் கையாளும் முறைகள் வினோதமாக உள்ளது.
இந்நிலையில், பயங்கரவாத செயல்களை நிகழ்த்தும் நோக்கில் உருவாக்கப்படும் ஆளில்லா விமானங்களை சுடுவதால் பேராபத்து நிகழ்கிறது.
இதைத் தவிர்க்க பிரான்ஸ் விமானப் படையினர் 4 கழுகுகளுக்கு பயிற்சி அளித்துள்ளனர். பயங்கரவாதிகளின் ஆளில்லா விமானங்கள் மீது தாக்குதல் நடத்தி அழிக்கும் திறன் கொண்ட ஆயுதங்கள் கழுகுகளின் கால்களில் கட்டப்படுகின்றன.
20 நொடிகளில் 200 மீட்டர் தூரம் பறக்கும் வல்லமை படைத்த கழுகுகள் அந்த விமானங்கள் மீது வேகமாக மோதி அதை புற்தரையில் விழ வைக்கின்றன.