திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Modified: புதன், 31 மே 2017 (20:49 IST)

நேரலையில் பெண் நிருபருக்கு முத்தம் கொடுத்த டென்னிஸ் வீரர் (வீடியோ)

நேரலையில் பெண் நிருபருக்கு முத்தம் கொடுத்த டென்னிஸ் வீரருக்கு பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.


 

 
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடர் பாரீஸ் நகரில் நடைப்பெற்று வருகிறது. கடந்த திங்கட்கிழமை நடைப்பெற்ற போட்டியில் விளையாடிய பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த மேக்சிம் ஹமோயு(21) தோல்வியடைந்தார். இந்த போட்டிக்கு பின் யூரோ ஸ்போர்ஸ் தொலைக்காட்சியை சேர்ந்த பெண் நிருபர் ஒருவர் இவரை பேட்டி கண்டார்.
 
கலகலப்பக பேட்டி கொடுத்த மேக்சிம் திடீரென அந்த பெண் நிருபரை முத்தம் இட்டார். இது அந்த பெண் நிருபருக்கு பெரும் தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியது. இது நேரலை பேட்டி என்பதால் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
 
இந்நிலையில் மேக்சிம் அங்கீகாரத்தை ரத்து செய்ய முடிவு செய்துள்ளதாக பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரின் ஒருங்கிணைப்பாளர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளனர். இதையடுத்து அவர் தொடர்ந்து இந்த தொடரில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

நன்றி: BJ Magazine