செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By siva
Last Updated : வெள்ளி, 23 ஏப்ரல் 2021 (16:02 IST)

இந்தியாவுக்கு உதவ தயார்: பிரான்ஸ் அதிபர் அறிவிப்பு!

இந்தியாவில் கொரோனா வைரஸ் கட்டுக்கடங்காமல் அதிகரித்து கொண்டு இருக்கும் நிலையில் உலக நாடுகள் இந்தியாவில் இருந்து வரும் விமானங்களுக்கு தடை விதித்துள்ளன 
 
இதனால் உலக நாடுகளில் இருந்து இந்தியாவை தனிமைப்படுத்தப்படும் அபாயம் இருப்பதாக கூறப்பட்டது. இந்த நிலையில் ஏற்கனவே இந்தியாவுக்கு ஆக்சிஜன் கொடுத்து உதவ தயார் என சீனா அறிவித்துள்ளது. தற்போது இந்தியாவுக்கு உதவ தயார் என பிரான்ஸ் நாட்டின் அதிபர் இமானுவேல் அவர்கள் தெரிவித்துள்ளார் 
 
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய பிரான்ஸ் அதிபர் இமானுவேல் இந்திய மக்களின் பக்கம் பிரான்ஸ் எப்போதும் இருக்கும் என்றும் கொரோனாவுக்கு எதிரான போரில் இந்தியாவுடன் இணைந்து இருப்பதாகவும் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க தயாராக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்