வெள்ளி, 29 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 2 மார்ச் 2020 (07:47 IST)

முத்தம் கொடுத்தால் கொரோனா பரவும் – பிரான்ஸ் அரசு ஆலோசனை !

கோப்புப் படம்

கொரோனா வைரஸ் பீதி தாக்கியுள்ள பிரான்ஸ் நாட்டில் மக்கள் கைகுலுக்குவது மற்றும் முத்தம் கொடுப்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

சீனாவில் ஆரம்பித்து இப்போது உலகம் எங்கும் பரவி வரும் கொரோனா வைரஸ் பீதி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. சீனாவில், இதுவரை 2,888 பேர் உயிரிழந்துள்ளனர். 79,822 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த வைரஸ் தாக்குதலில் இருந்து மக்களைக் காப்பாற்ற எல்லா நாட்டு அரசுகளும் முயற்சி எடுத்து வருகின்றனர்.

பிரான்ஸில் இந்நோய் தாக்குதல் 100 பேருக்கு மேல் இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. இந்நிலையில் மேலும் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் விதமாக அந்நாட்டு சுகாதாரத்துறை ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது அதில் ‘மக்கள் அதிகமாக ஒன்றுகூடுவதை தவிர்க்கும்படியும் சந்திப்பின் போது மரியாதை நிமித்தமாக கைகுலுக்குதல் மற்றும் முத்தமிடுதல் ஆகியவற்றை தவிர்க்கும் படியும் அறிவுறுத்தியுள்ளது.