Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ட்ரம்பை நான் காதலிக்கவில்லை: பிரான்ஸ் முன்னாள் அதிபர் மனைவி விளக்கம்


Abimukatheesh| Last Updated: செவ்வாய், 20 ஜூன் 2017 (15:42 IST)
பிரான்ஸ் முன்னாள் அதிபர் நிகோலஸ் சர்கோசியின் மனைவி கர்லா புரூனி, தான் ஒருபோதும் அமெரிக்க அதிபர் ட்ரம்பை காதலித்தது இல்லை என கூறியுள்ளார்.

 

 
அமெரிக்க அதிபர் தேர்தல் பிரசாரத்தின்போது டொனால்டு ட்ரம்ப் மற்றும் கர்லா புரூனி காதலித்ததாகவும், ட்ரம்பின் இரண்டாவது மனைவி விவாகரத்து பெற புரூனிதான் காரணம் என செய்திகள் பரவியது. அதை அப்போது ட்ரம்ப் மறுத்தார். பின் ஆமாம் அது உண்மைதான் என கூறியிருந்தார். அதற்கு கர்லா புரூனி மறுப்பு தெரிவித்துள்ளார்.
 
இதுகுறுத்து அவர் கூறியதாவது:-
 
ட்ரம்ப் எவ்வாறு இப்படி கூறினார் என்று என தெரியவில்லை. ஆனால் நான் ஒருபோதும் ட்ரம்பை காதலித்தது இல்லை என கூறியுள்ளார்.
 
கர்லா புரூனி முதல் கணவரை விவாகரத்து செய்து இரண்டாவதாக பிரான்ஸ் முன்னாள் அதிபர் நிகோலஸ் சர்கோசியை 2008ஆம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டார். தற்போது கர்லா புரூனிக்கு 5 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.
 
அமெரிக்க அதிபர் தேர்தலின்போது பெரும் சர்ச்சையாக பேசப்பட்ட செய்திக்கு கர்லா புரூனி முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
 


இதில் மேலும் படிக்கவும் :