செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 4 டிசம்பர் 2018 (20:11 IST)

யெல்லோ ஜாக்கெட் போராட்டம்: அடிப்பணிந்த பிரான்ஸ் அரசு

சில வாரங்கள் வன்முறை போராட்டங்களுக்கு வழிவகுத்த எரிபொருளுக்கான வரி விதிப்பை இடை நிறுத்துவதாக பிரான்ஸ் அரசு தெரிவித்திருக்கிறது.
 
பிரான்ஸ் நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான அதிகப்படியான வரி விதிப்பை அரசு கொண்டு வந்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் கடந்த 3 வாரங்களாக போராட்டம் நடத்தி வருகிறார்கள். 
 
இதற்கிடையே மின்கட்டணமும் உயர்த்தப்படும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது மக்களை கொந்தளிப்பான நிலைக்கு தள்ளியுள்ளது. இதனால், இந்த போராட்டங்கள் பிரான்சிஸின் முக்கிய நகரங்களில் கணிசமான சேதங்களை ஏற்படுத்தியுள்ளன. 
 
இதனால் வேறு வழியின்றி பிரான்ஸ் அதிபர் இமானுவல் மேக்ரோன் 2019 ஆம் ஆண்டு முதல் கொண்டுவர திட்டமிட்டிருந்த எரிபொருள் வரி உயர்வை தற்காலிகமாக ரத்து செய்ய முடிவெடுத்துள்ளார். 
 
யெல்லோ ஜாக்கெட் என்று அறியப்படும் இந்த போராட்டங்கள் அரசின் மீதான மக்களின் கோபத்தை வெளிக்காட்டுவதாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.