Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

தாயை கட்டிப்போட்டு 16 வயது மகளை பலாத்காரம் செய்து மொட்டை அடித்த கொடூரம்!

தாயை கட்டிப்போட்டு 16 வயது மகளை பலாத்காரம் செய்து மொட்டை அடித்த கொடூரம்!

செவ்வாய், 1 ஆகஸ்ட் 2017 (13:08 IST)

Widgets Magazine

வங்கதேசத்தில் 4 பேர் கொண்ட கும்பல் ஒன்று 16 வயதான மாணவி ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு அவரரையும் அவரது தாயையும் மொட்டை அடித்துவிட்டு கொலை மிரட்டல் விட்ட சம்பவம் ஒன்று நடந்துள்ளது.


 
 
வங்கதேசத்தின் போக்ரா பகுதியில் தாயும் அவரது 16 வயது மகளும் தனியாக வசித்து வந்துள்ளனர். அப்போது அவர்களது வீட்டில் நுழைந்த 4 பேர் கொண்ட கும்பல் ஒன்று அவர்களை கடுமையாக தாக்கியுள்ளது.
 
அதன் பின்னர் அந்த மாணவியின் தாயை கட்டிப்போட்டுவிட்டு அந்த மாணவியை அந்த கும்பல் பாலியல் பலாத்காரம் செய்துள்ளது. அதன் பின்னர் தாய் மகள் இருவரையும் மொட்டை அடித்துவிட்டு கொலை மிரட்டல் விடுத்துவிட்டு சென்றுள்ளனர்.
 
இந்த கொடூர சம்பவத்தில் அந்த மாநிலத்தின் ஆளும் கட்சியின் தொழிலாளர் பிரிவை சேர்ந்த டுஃபான் சார்கெர் என்பவர் ஈடுபட்டதாக அவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட அந்த மாணவிக்கும் டுஃபான் சார்கெருக்கும் தொடர்பு இருப்பதாக அவரின் மனைவி ஆஷா காடுன் சந்தேகப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
 
மேலும் இந்த சம்பவத்தில் ஆஷா காடுனுக்கு முக்கிய பங்கு இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் அவரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட டுஃபான் சார்கெர் மற்றும் அவருக்கு துணையாக இருந்த மூவரையும் கைது செய்த போலீசார் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தது மற்றும் கொலை மிரட்டல் விடுத்தது ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

பிறந்த குழந்தையின் வயிற்றில் குழந்தை: அதிர்ச்சியில் மருத்துவர்கள்!

மும்பையில் பிறந்த குழந்தை ஒன்றின் வயிற்றில் மற்றொரு குழந்தை இருந்துள்ளது. இதனை கண்டு ...

news

உங்கள் ஓட்டு ஓவியாவிற்கே ; வாக்கு சேகரிக்கும் ரசிகர்கள் : இது என்னடா அக்கப்போர்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கல்ந்து கொண்டுள்ள நடிகை ஓவியாவிற்கு கூகுளில் ஓட்டு போடுமாறு அவரின் ...

news

கமல்ஹாசன் முதல்வராகலாம்; ரஜினிக்கு வாய்ப்பு இல்லை: பிரபல ஜோதிடர் கணிப்பு!

தமிழக அரசியலில் ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் அரசியல் வெற்றிடம் ஒன்று ஏற்பட்டுள்ளது. திமுக ...

news

தாலி கட்டியதும் மணமகனிடம் காதலுடன் ஓடப்போவதாக கூறிய மணமகள்

கேரள மாநிலத்தில் திருமணம் முடிந்த கையோடு மணமகள் காதலுடன் ஓடப் போவதாக மணமகனிடம் கூறிய ...

Widgets Magazine Widgets Magazine