வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : ஞாயிறு, 23 அக்டோபர் 2016 (18:56 IST)

​எவரெஸ்ட்டை அடைந்த முதல் பெண் மரணம்

எவரெஸ்ட் சிகரத்தை முதன் முதலில் அடைந்த ஜப்பானிய மலையேற்ற வீராங்கனை உடல் நலக்கோளாறு காரணமாக அவரது 77 வயதில் மரணமடைந்தார்.


 

 
ஜப்பானைச் சேர்ந்த ஜன்க்கோ டபீ, 1975ம் ஆண்டு எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த உலகின் முதல் பெண். 1939ம் ஆண்டு புகுஷிமோ மாநிலத்தில் பிறந்த ஜன்க்கோ டபீ, நான்காம் வகுப்பு படிக்கும் போது முதன் முதலாக நசு மலை உச்சிக்குச் சென்று சாதனை படைத்தார். 
 
1962ம் ஆண்டு பல்கலைக்கழக பட்டப்படிப்பை வெற்றிகரமாக முடித்த டபீ, 1969ம் ஆண்டு முதன் முதலாக முழுவதும் பெண்களைக் கொண்ட மலையேற்ற வீராங்கனைகள் குழுவைத் தொடங்கினார். 
 
கடந்த 4 ஆண்டுகளாகப் புற்று நோயால் அவதிப்பட்டு வந்தவர், தமது 77வது வயதில் உயிரிழந்ததாக ஜப்பான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.