1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Modified: ஞாயிறு, 23 அக்டோபர் 2016 (15:48 IST)

டொனால்ட் டிரம்ப்க்கு எதிராக ஆவணப்படம் வெளியீடு

அமெரிக்க அதிபர் வேட்பாளராக போட்டியிடும் டொனால்டு டிரம்ப்க்கு எதிரான பிரச்சாரம் பாலியல் புகார் என்ற பெயரில் நடைப்பெற்று கொண்டிருக்கிறது. டிரம்ப்க்கு எதிரான பிரச்சார ஆவணப்படத்தை பிரபல ஹாலிவுட் ஆவணப்பட இயக்குனரான மைக்கேல் மூர் வெளியிட்டுள்ளார்.


 

 
அமெரிக்க அதிபர் தேர்தல் இறுதி கட்டத்தை நெருங்கி கொண்டு இருக்கிறது. அதிபர் வேட்பாளராக போட்டியிட்ட டொனால்டு டிரம்ப் மீது ஆரம்பம் முதல் பாலியல் புகார்கள் அளிக்கப்பட்டு வருகிறது.
 
இந்நிலையில் தற்போது ஆபாச நடிகை ஒருவர் 11வது ஆளாக புகார் அளித்துள்ளார். அதோடு டிரம்ப்க்கு எதிரான பிரச்சார ஆவணப்படத்தை பிரபல ஹாலிவுட் ஆவணப்பட இயக்குனரான மைக்கேல் மூர் வெளியிட்டுள்ளார்.
 
‘மைக்கேல் மூர் இன் டிரம்ப்லேன்ட்’ (Michael Moore in TrumpLand) என்ற படத்தில் இவர் மட்டுமே நடித்து, அந்தப் படத்தின் இலவச சிறப்புக் காட்சியை நியூயார்க் நகரில் உள்ள ஐ.எப்.சி. சென்டரில் வெற்றிகரமாக நடத்தினார்.
 
73 நிமிடங்கள் ஓடும் ‘மைக்கேல் மூர் இன் டிரம்ப்லேன்ட்’ படத்தில் டொனால்ட் டிரம்ப்பை எரிச்சலூட்டும் வகையில் ஏதுமில்லை. ஹிலாரியை ஏன் ஆதரிக்க வேண்டும்? என தனது கருத்தை மைக்கேல் மூர் பலமாக பதிவு செய்துள்ளார் என அமெரிக்க திரை விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.