வியாழன், 21 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 30 ஆகஸ்ட் 2021 (10:44 IST)

விண்வெளி வீரர்களுக்கு ஐஸ் க்ரீம், ஜப்பான் ரோபோ! – விண்வெளிக்கு அனுப்பிய ஸ்பேஸ் எக்ஸ்!

விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள வீரர்களுக்கு தேவையான பொருட்கள் ராக்கெட் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

பூமிக்கு மேலே சுழன்றபடி செயல்பட்டு வரும் விண்வெளி ஆய்வு மையத்தில் அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன் என பல நாடுகளை சேர்ந்த விண்வெளி வீரர்கள் விண்வெளி ஆய்வில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் அவர்களுக்கு தேவையான உபகரணங்கள், உணவு பொருட்கள் அடிக்கடி விண்கலம் மூலமாக அனுப்பி வைக்கப்படுகிறது.

இந்நிலையில் தற்போது நாசாவுடன், எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் இணைந்து 2170 கிலோ எடையுள்ள உபகரணங்கள் மற்றும் உணவு பொருட்களை பால்கன் விண்கலம் மூலம் விண்வெளி ஆய்வு மையத்திற்கு அனுப்பி வைத்துள்ளது. அதில் விண்வெளி வீரர்களுக்கு ஐஸ்க்ரீம், அவகோடா பழம், செடிகள் உள்ளிட்டவையும் ஜப்பான் தயாரித்த ஆளுயர ரோபோ ஒன்றும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.