1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Murugan
Last Updated : வியாழன், 11 பிப்ரவரி 2016 (18:16 IST)

இந்த எண்ணிலிருந்து அழைப்பு வந்தால் எடுக்காதீர்கள் : உங்கள் பில் எகிறும்

விஞ்ஞான ரீதியில் மக்களிடம் திருடும் புது புது உத்தியை அவ்வப்போது சிலர் கண்டுபிடித்துக் கொண்டே இருக்கிறார்கள்.


 

 
இதற்கு முன், அறிமுகம் இல்லாத எண்களிலிருந்து நமது செல்போனுக்கு அழைப்பு வரும். வங்கியிலிருந்து பேசுகிறோம் என்று கூறி நமது வங்கிகணக்குகளின் விவரங்களை கேட்பார்கள், முக்கியமாக நமது ஏடிஎம் கார்டு மற்றும் ஆன்லைன் தொடர்பான ரகசிய எண்களை கேட்பார்கள்.  வங்கியிலிருந்துதானே கேட்கிறார்கள் என்று நாமும் அந்த விபரங்களை கொடுத்தால் அவ்வளவுதான், நமது கணக்கில் உள்ள எல்லா பணத்தையும் எடுத்து விடுவார்கள்.
 
ஆனால், மக்கள் இப்போது கொஞ்சம் உஷாராகி விட்டதால், புதிய டெக்னிக்கை கண்டுபிடித்துள்ளார்கள். உங்கள் எண்ணுக்கு +234 அல்லது +372 என்று தொடங்கும் எண்களில் இருந்து அழைப்பு வரும். அந்த எண்கள் நைஜீரியா மற்றும் எஸ்டோனியா நாடுகளை சேர்ந்தது.
 
அந்த அழைப்பை எடுத்து நீங்கள் பேசினால் ஒரு நிமிடத்திற்கு ரூ.300 முதல் 400 வரை கட்டணம் வசூலிக்கப்படும். பெரும்பாலும் அவர்கள், உங்களுக்கு லாட்டரி விழுந்திருப்பதாகவோ அல்லது உங்கள் உறவினர் காயம் அடைந்து சாலையில் கிடக்கிறார் என்று பயமுறுத்துவார்கள்.
 
நீங்கள் பதறிபோய் பேச்சை தொடர்ந்தால், கொஞ்சம் கொஞ்சமாக உங்கள் வங்கி கணக்கு விபரங்களை நைசாக வாங்கி விடுவார்கள். போஸ்ட் பெய்ட் கனெக்‌ஷன் வைத்திருப்பவர்கள்தான் அவர்களின் இலக்கு. மாத கடைசியில் உங்கள் போன் பில்லை பார்த்தால் மயங்கி விடுவீர்கள்.
 
எனவே இதிலிருந்து தப்பிக்க உங்களுக்கு சில வழிகள் இருக்கிறது. இது போன்ற தெரியாத வெளிநாட்டு எண்களிலிருந்து வரும் அழைப்பை எடுக்காதீர்கள். அதேபோல் மிஸ்டு கால் பார்த்து திருப்பி அழைக்காதீர்கள்.
 
அடுத்து, வெளிநாட்டில் இருக்கும் உங்கள் உறவினரின் வசிக்கும் பகுதி தொலைபேசி எண்ணை தெரிந்து கொள்ளுங்கள். அதேபோல், ட்ரூ காலர், ஸ்பேம் நம்பர் போன்ற சாப்ட்வேர்களை செல்போனில் வைத்துக் கொண்டால், அந்த அழைப்பு எங்கிருந்து வருகிறது  என்பதை தெரிந்து கொள்ளலாம்.
 
மேலும், போஸ்ட்பெய்ட் சிம் வைத்திருப்பவர்கள், அவர்களது பில் தொகையை ஒவ்வொரு மாதமும் தவறாமல் சரி பார்க்க வேண்டும்.  அப்படி செய்தால் உங்கள் இழப்பை தவிர்க்கலாம்.