பொம்மை வெடித்து 3 சிறுவர்கள் பலி - தீவிரவாதிகள் தாக்குதலா?

லெனின் அகத்தியநாடன்| Last Modified வியாழன், 6 நவம்பர் 2014 (16:50 IST)
பஞ்சாப் மாகாணத்தில் பொம்மை வெடிகுண்டு வெடித்ததில் 3 சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
வாஹா எல்லைப்பகுதியில் பாகிஸ்தானுக்கும், இந்தியாவுக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு நிகழ்ந்து வருகிறது. இந்நிலையில் பஞ்சாப் மாகாணத்தில் பொம்மை வெடிகுண்டு ஒன்று வெடித்து சிதறியதில் அப்பாவி சிறுவர்கள் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

லாகூரை அடுத்து 80 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நரோவல் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் சிறுவர்கள் பொம்மைகளை வைத்து விளையாடிக் கொண்டு இருந்தனர். அப்போது அதில் ஒரு பொம்மை வெடித்து சிதறியதில் 3 சிறுவர்கள் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர்.
காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அது பொம்மை இல்லை என்றும், சிறிய ரக பீரங்கி வெடிகுண்டாக இருக்கலாம் என்று கருதுகின்றனர். இதுகுறித்து பஞ்சாப் மாகாண அரசு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :