1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வியாழன், 7 ஜூலை 2022 (14:17 IST)

நெருக்கடி மேல் நெருக்கடி: இங்கிலாந்து பிரதமர் ராஜினாமாவா?

Boris Johnson
இங்கிலாந்து நாட்டின் பிரதமர் போரிஸ் ஜான்சன் அமைச்சரவையில் இருந்த 4 அமைச்சர்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்ததை அடுத்து இங்கிலாந்து பிரதமர் போரீஸ் ஜான்சன் இன்று ராஜினாமா செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது 
 
இங்கிலாந்து நாட்டின் பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது பிரதமர் பதவியை இன்று ராஜினாமா செய்வார் என இங்கிலாந்து ஊடகங்கள் செய்தி வெளியிட்டு உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
இங்கிலாந்து நாட்டின் நிதியமைச்சர் முதலில் தனது பதவியை ராஜினாமா செய்தார். அதனை அடுத்து மூன்று அமைச்சர்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்தனர். ஒரே நேரத்தில் நான்கு அமைச்சர்கள் ராஜினாமா செய்ததால் இங்கிலாந்து அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது 
 
இதனை அடுத்து அடுத்தடுத்து நான்கு அமைச்சர்கள் ராஜினாமாவை தொடர்ந்து ஆளும் கன்சர்வேடிவ் கட்சியை சேர்ந்த சில எம்பிக்களும் ராஜினாமா செய்து வருவதாக கூறப்படுகிறது 
 
நாளுக்கு நாள் பிரதமர் பிரதமர் போரிஸ் ஜான்சன் மீது அதிருப்தி அதிகரித்து வருவதை அடுத்து பிரதமர் என்று ராஜினாமா செய்யப் போவதாக கூறப்படுகிறது