வெள்ளி, 7 பிப்ரவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 12 அக்டோபர் 2016 (14:03 IST)

இங்கிலாந்தில் டொனால்டு டிரம்ப் போன்று உடை அணிந்த நாய்!!

இங்கிலாந்தில் நாய்களுக்கான ஆடை அலங்கார போட்டி நடைபெற்றது. இதில், லாங்‌ஷர் பகுதியை சேர்ந்த ஸ்புட் என்ற பாக்சர் இன நாய் டொனால்டு டிரம்ப் போன்று உடை அணிந்ததால்  பரிசை வென்றது.

 
இங்கிலாந்தில் நாய்களுக்கான ஆடை அலங்கார போட்டியை, ஆன்லைன் வர்த்தக நிறுவனம் ஒன்று நடத்தியது. இப்போட்டியில் நாடு முழுவதும் இருந்து 82 நாய்கள் பலவிதமான ஆடை அலங்காரத்துடன் கலந்து கொண்டன. 
 
அவற்றில் ஸ்புட் என்ற 3 வயது பாக்சர் இன நாய், அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிடும் டொனால்டு டிரம்ப் போன்று உடை அணிந்து இருந்தது. தலைமுடி அலங்காரமும் டிரம்ப் போன்றே இருந்தது. அதனால் இது பரிசை தட்டிச் சென்றது.
 
இந்த நாய் டிரம்ப் போன்று இளஞ்சிவப்பு நிறத்தில் பேண்ட், ‌ஷர்ட் மற்றும் கோட் மற்றும் நீல நிறத்தில் சில்க் டை அணிந்து இருந்தது குறிப்பிடதக்கது.