1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 23 ஜூலை 2021 (12:28 IST)

மணிக்கு எவ்ளோ கிலோ மீட்டர் போகும்? – லண்டனில் செய்யப்பட்ட ஐஸ்கட்டி கார்!

உலகில் பல்வேறு வகையான கார்கள் தயாரிக்கப்பட்டு வரும் நிலையில் அதிகமான கார் உற்பத்தியின் ஆபத்தை வலியுறுத்தி ஐஸ்கட்டியால் செய்யப்பட்டுள்ள கார் வைரலாகியுள்ளது.

உலகம் முழுவதும் தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் ஆடம்பரம் காரணமாக மக்களுக்கு கார் மீதான மோகம் அதிகரித்துள்ளது. அதற்கேற்ப சின்ன விலையிலிருந்து பல கோடி ரூபாய் வரையிலான ஆடம்பர கார்களும் விற்பனை செய்யப்படுகின்றன.

இந்நிலையில் லண்டனில் ஜென்பேக்ட் என்னும் கார் தயாரிப்பு நிறுவனம் ஐஸ்கட்டியால் கார் ஒன்றை வடிவமைத்துள்ளது. கார்கள் பெருக்கத்தால் ஏற்படும் கால நிலைமாற்றம், உலக வெப்பமயமாதல் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், அதிக நச்சு வாயு வெளியேற்றாத அளவு கார் தயாரிப்பை மேம்படுத்துவது குறித்தும் வலியுறுத்த இதை செய்துள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.